திண்டிவனம் அருகே விவசாயி வீட்டில் 11 பவுன் நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
சிறுவை கிராமத்தைச் சேர்ந்தவர் குமார்(55), விவசாயி. இவரது மனைவி விஜயா. வியாழக்கிழமை குமார் தனது மனைவியுடன் காற்றுக்காக வீட்டின் வராண்டாவில் படுத்துத் தூங்கினார்.
இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள், வீட்டின் பின்பக்கக் கதவை உடைத்து உள்ளே புகுந்து பீரோவில் இருந்த 11 பவுன் தங்க நகைகளை திருடிக்கொண்டு தப்பினர். இதுகுறித்த புகாரின் பேரில் மயிலம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.