விழுப்புரம் மாவட்டத்தில் சாலைப் பாதுகாப்பு நடவடிக்கைகள் கண்காணிப்பது தொடர்பாக, உச்சநீதிமன்ற ஆணைப்படி அமைக்கப்பட்ட குழு உறுப்பினர்களுடனான கலந்தாலோசனைக் கூட்டம், விழுப்புரத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு ஆட்சியர் இல.சுப்பிரமணியன் தலைமை வகித்தார்.
மாவட்டத்தில் சாலைப் பாதுகாப்பு தொடர்பாக மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்து கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டது.
மேலும், அண்மையில் நடைபெற்ற பெரிய விபத்து பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு, அங்கு விபத்துகளை தடுப்பது குறித்தும், இதே போல, மாவட்டத்தில் சாலை விபத்துகள் ஏற்படாமல் தடுப்பது, விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகளை குறைப்பது, சாலைப் பாதுகாப்பை மேம்படுத்துவது, சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை பொது மக்கள், பள்ளி மாணவர்களிடையே ஏற்படுத்தும் திட்டங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டன.
இந்தக் கூட்டத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் இரா.பிரியா, வட்டாரப் போக்குவரத்து அலுவலர் பாலகுருநாதன், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சரவணக்குமார், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் க.முனுசாமி, துணைக் காவல் கண்காணிப்பாளர்கள், போக்குவரத்து ஆய்வாளர்கள், வட்டாரப் போக்குவரத்துத் துறையினர், நெடுஞ்சாலைத் துறையினர், போக்குவரத்துக் கழகத்தினர், தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தினர், சுகாதாரத் துறையினர், ஊரக வளர்ச்சி உள்ளிட்ட துறை அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.