உளுந்தூர்பேட்டை அருகே கந்துவட்டி புகாரின்பேரில் 3 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
உளுந்தூர்பேட்டை அருகே திருநாவலூர் அடுத்த கூ. நத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் தெய்வநாயகம் மகன் ஆனந்தன்.இவர், கடந்த 2015-ஆம் ஆண்டு அதே ஊரைச் சேர்ந்த வீரமுத்து, ஜெகஜோதி, சங்கர் ஆகியோரிடம் ரூ.2.50 லட்சம் கடன் பெற்றாராம். இதன்பிறகு, வட்டியுடன் சேர்த்து ரூ.3 லட்சத்தை கடந்த 1-ஆம் தேதி திருப்பிக் கொடுத்தாராம்.
ஆனால், வட்டியுடன் ரூ.6 லட்சம் வேண்டும் என்று கேட்டு மிரட்டுவதாக திருநாவலூர் போலீஸில் ஆனந்தன் புகார் செய்தார்.
இது தொடர்பாக, வீரமுத்து உள்ளிட்ட 3 பேர் மீது கந்துவட்டி சட்டத்தின் கீழ் போலீஸார் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.