விழுப்புரம்

சுவர் இடிந்து விழுந்து முதியவர் பலி

22nd Jul 2019 10:23 AM

ADVERTISEMENT

விழுப்புரம் அருகே மழையால் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் முதியவர் சனிக்கிழமை இரவு உயிரிழந்தார்.
 விழுப்புரம் அருகே காணை அடுத்த கல்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் பாண்டுரங்கன்(50). கடந்த சில நாள்களாக அப்பகுதியில் பலத்த மழை பெய்தது. 
 இதனால் மழையால் நனைந்து ஊறிப் போய் இருந்த அவரது வீட்டின் மண் சுவர், திடீரென இடிந்து விழுந்தது. இதில், வீட்டுக்குள் தூங்கிக்கொண்டிருந்த பாண்டுரங்கன் மீது சுவர் விழுந்தது. பலத்த காயமடைந்த அவர் விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். 
பின்னர் தீவிர சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சனிக்கிழமை இரவு அவர் உயிரிழந்தார். இது குறித்து காணை போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT