விழுப்புரம்

இயற்கை மருத்துவ ஆலோசனை முகாம்

22nd Jul 2019 10:24 AM

ADVERTISEMENT

விழுப்புரத்தில் இயற்கை மருத்துவ ஆலோசனை முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இயற்கை வாழ்வியல் இயக்கம் மற்றும் விழுப்புரம் ரோட்டரி சங்கம் சார்பில் மூலிகை இயற்கை மருத்துவ ஆலோசனை சிறப்பு மருத்துவ முகாம், விழுப்புரம் கிழக்கு பாண்டி சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 
இயற்கை வாழ்வியல் இயக்க சிறப்புத் தலைவர் ராமமூர்த்தி வரவேற்றார். 
மூலிகைக் கண்காட்சியை விழுப்புரம் ரோட்டரி சங்கத் தலைவர் பாலகுருநாதன் தொடக்கி வைத்தார். யோகாசன பயிற்சி யாளர் ஆதிநாராயணன், உடல் நலத்தை காத்திடும் வகையில் எளிய வகை பயிற்சிகளை செய்து காண்பித்தார்.
தொடர்ந்து, பாரம்பரிய இயற்கை மருத்துவர்கள் வைத்தியலிங்கம், ஜெயராமன் ஆகியோர் கலந்து கொண்டு 
மூலிகைகளின் பயன்கள் குறித்து விளக்கினர்.
இயற்கையை காப்பது குறித்தும், உணவுமுறை மாற்றம் குறித்தும் இயற்கை வாழ்வியல் 
இயக்கச் செயலர் சங்கரன், விழுப்புரம் ரோட்டரி சங்க துணை ஆளுநர் காங்கேயன், ரோட்டரி சங்க முன்னாள் தலைவர்கள் கந்தன், புதுராஜா ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
இயற்கை வாழ்வியல் இயக்க நிர்வாகிகள் சொக்கலிங்கம், சிவகுருநாதன், சுப்புராயன், தேவராஜ், காசிவிஸ்வநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த முகாமில், 100-க்கும் மேற்பட்ட மூலிகைச் செடிகள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. இதனை பொதுமக்கள் ஆர்வமுடன் பார்வையிட்டு, பயன்களை கேட்டறிந்தனர். முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு, இயற்கை முறை உணவுகள் வழங்கப்பட்டன.

ADVERTISEMENT
ADVERTISEMENT