விழுப்புரம்

செஞ்சி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆடி கிருத்திகை திருவிழா கொடியேற்றம்

16th Jul 2019 10:07 AM

ADVERTISEMENT

செஞ்சி - திருவண்ணாமலை சாலையில் ஏரிக்கரை பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீசுப்பிரமணியசுவாமி கோயிலில் 48-ஆவது ஆண்டு ஆடிக் கிருத்திகை திருவிழா கொடியேற்றத்துடன் திங்கள்கிழமை தொடங்கியது.
முன்னதாக, காலை 6 மணியளவில் கணபதி ஹோமம், சுப்ரமண்யர் ஹோமம் ஆகியவை நடைபெற்றன. காலை 7.30 மணியளவில் கொடிமரத்துக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. தொடர்ந்து,  ஸ்ரீசுப்ரமண்யர் சுவாமி கொடியேற்றமும்  நடைபெற்றது.
விழாவில், 26-ஆம் தேதி ஆடி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு அன்று காலை 8 மணிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற உள்ளது. அன்று இரவு 9 மணிக்கு ஸ்ரீவள்ளி - தேவசேனா சமேத ஸ்ரீசுப்பிரமணிய சுவாமி மாட வீதி உலா நடைபெறும். விழாவில், 27-ஆம் தேதி பால்குடம் ஊர்வலம், சக்திவேல் வீதி உலா, மிளகாய்ப்பொடி அபிஷேகம், செடல் சுற்றுதல், காவடியாட்டம் ஆகியவை நடைபெற உள்ளன.
விழாவுக்கான ஏற்பாடுகளை செஞ்சி ஒழுங்குமுறை விற்பனைக்கூட நெல், அரிசி, மணிலா வியாபாரிகள், எடைப்பணி தொழிலாளர்கள், பொதுமக்கள்  செய்து வருகின்றனர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT