விழுப்புரம்

செஞ்சி சார்-பதிவாளர் அலுவலகத்தில்  ஊழல் தடுப்பு போலீஸார் சோதனை

16th Jul 2019 10:07 AM

ADVERTISEMENT

விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் உள்ள சார்-பதிவாளர் அலுவலகத்தில் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸார் திங்கள்கிழமை சோதனையில்  ஈடுபட்டனர். 
செஞ்சி வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள சார்-பதிவாளர் அலுவலகத்தில் ஊழல் தடுப்புப் பிரிவு டிஎஸ்பி தேவநாதன் தலைமையில் தலைமைக் காவலர்கள் விஜயதாஸ், சூடாமணி உள்ளிட்ட போலீஸார் திங்கள்கிழமை மாலை 6 மணியளவில் திடீர் சோதனையை தொடங்கினர். இரவு 11 மணி  வரை சோதனை நீடித்தது. இதில் கணக்கில் வராத ரூ.1.27 லட்சம் பணம் கைப்பற்றப்பட்டது. இந்த அலுவலகத்தில் தலைமை எழுத்தராக உள்ள சடகோபன் சார் - பதிவாளர் பொறுப்பில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT