விழுப்புரம்

போக்சோ சட்டத்தின் கீழ் இளைஞர் கைது

12th Jul 2019 08:36 AM

ADVERTISEMENT

விழுப்புரம் அருகே சிறுமியைக் கடத்தி திருமணம் செய்ததாக இளைஞரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.
 விழுப்புரம் அருகேயுள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமி, பிளஸ் 2 படித்துவிட்டு புதுச்சேரியில் உள்ள தனியார் மருந்து நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். அதே நிறுவனத்தில் வேன் ஓட்டுநராகப் பணியாற்றி வந்த மரக்காணம் அருகே உப்புவேலூரைச் சேர்ந்த கண்ணாயிரம் மகன் மணி (22), சிறுமியை கடத்திச் சென்று திருமணம் செய்துகொண்டாராம்.
 இந்த நிலையில், தங்களது மகளான 17 வயது சிறுமியைக் கடத்தி திருமணம் செய்துகொண்டதாக மணி மீது சிறுமியின் பெற்றோர் விழுப்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில், போலீஸார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, மணியைக் கைது செய்தனர்.
 
 
 

ADVERTISEMENT
ADVERTISEMENT