விழுப்புரம்

தண்ணீர் சேமிப்பு விழிப்புணர்வுப் பேரணி

12th Jul 2019 08:33 AM

ADVERTISEMENT

இந்திலி டாக்டர் ஆர்.கே.எஸ். மாஸ்டர்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி சார்பில், தண்ணீர் சேமிப்பு குறித்த விழிப்புணர்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.
 நிகழ்ச்சிக்கு கள்ளக்குறிச்சி காவல் துணைக் கண்காணிப்பாளர் ந.ராமநாதன் தலைமை வகித்து, தண்ணீர் சேமிப்பு குறித்து பேசினார். பின்னர், பேரணியை அவர் கொடியசைத்து தொடக்கிவைத்தார். பள்ளிச் செயலர் தே.கோவிந்தராஜ், தாளாளர் ஜி.எஸ்.குமார் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். பள்ளித் தலைவர் தே.மணிவண்ணன் வரவேற்றார்.
 மந்தைவெளி திடலில் இருந்து பேரணி தொடங்கியது. இதில், பங்கேற்ற மாணவர்கள், தண்ணீர் சேமிப்பு குறித்த வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கைகளில் ஏந்தியவாறு காந்தி சாலை, சேலம் - சென்னை நெடுஞ்சாலை உள்ளிட்ட பல்வேறு சாலைகளின் வழியாகச் சென்று இறுதியில் மந்தைவெளி திடலை அடைந்தனர்.
 இதில், நிர்வாக அலுவலர் ஜி.மோகனசுந்தர், பள்ளி முதல்வர் க.மாலதி, துணை முதல்வர் ரா.தனலெட்சுமி, கல்வி ஒருங்கிணைப்பாளர் எஸ்.பாலசத்யநாராயணன் மற்றும் ஆசிரியர்கள், என்.சி.சி, என்.எஸ்.எஸ். மாணவர்கள் பலர் பங்கேற்றனர். முடிவில் ஆசிரியர் பாலு நன்றி கூறினார்.
 
 

ADVERTISEMENT
ADVERTISEMENT