விழுப்புரம்

அவலூர்பேட்டையில் பலத்த மழை

12th Jul 2019 08:33 AM

ADVERTISEMENT

மேல்மலையனூர் வட்டம், அவலூர்பேட்டையில் புதன்கிழமை மாலை பலத்த காற்று, மின்னலுடன் கூடிய மழை பெய்தது.
 அவலூர்பேட்டையில் கடந்த சில வாரங்களாக கடும் வெப்பம் நிலவி வந்த நிலையில், பலத்த மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். மேலும், தண்ணீரின்றி காய்ந்துகொண்டிருந்த கரும்பு, நெல் உள்ளிட்ட பயிர்களுக்கு இந்த மழை பயனளிப்பதாக அமைந்ததால், விவசாயிகள் நிம்மதியடைந்தனர். எனினும், செஞ்சி பகுதியில் போதிய மழையில்லாமல் தொடர்ந்து கடுமையான வெயில் நீடித்து வருவதால், இந்தப் பகுதியில் குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT