விழுப்புரம்

ரயில்வே தொழில் சங்கத்தினர் கருப்புப் பட்டை அணிந்து பணி

4th Jul 2019 08:59 AM

ADVERTISEMENT

ரயில்வேயை தனியார் மயமாக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து, விழுப்புரம் மாவட்டத்தில் எஸ்.ஆர்.எம்.யூ. தொழில் சங்கத்தினர் கருப்புப் பட்டை அணிந்து புதன்கிழமை பணிபுரிந்தனர்.
 ரயில்வே துறையை தனியார்மயமாக்கும் முடிவை மத்திய அரசு கைவிடக் கோரி, 3 நாள்கள் கருப்புப் பட்டை அணிந்து பணியாற்றும் போராட்டத்தை எஸ்.ஆர்.எம்.யூ. ரயில்வே தொழில் சங்கம் அறிவித்தது. இதன்படி, விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை மாவட்டங்களைச் சேர்ந்த எஸ்.ஆர்.எம்.யூ. தொழில் சங்கத்தைச் சேர்ந்த ரயில்வே தொழிலாளர்கள் கருப்புப் பட்டை அணிந்து புதன்கிழமை பணிக்குச் சென்றனர்.
 விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு பிரிவுகளில் பணிபுரியும் ரயில்வே தொழிலாளர்கள் ஏராளமானோர் கருப்புப் பட்டை அணிந்து பணி மேற்கொண்டனர்.
 இதேபோல வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமையும் கருப்புப் பட்டை அணிந்து பணியாற்றுவோம் என்றும், எங்களது எதிர்ப்பை மத்திய அரசு உணர்ந்து கொண்டு, தனியார் மயத்தை கைவிட வேண்டும் என்றும் தொழில்சங்கத்தினர் வலியுறுத்தினர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT