விழுப்புரம்

குண்டர் சட்டத்தின் கீழ் இளைஞர் கைது

4th Jul 2019 08:58 AM

ADVERTISEMENT

திருக்கோவிலூர் அருகே குண்டர் சட்டத்தின் கீழ் இளைஞரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
 திருக்கோவிலூர் அருகே சந்தப்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் கலை(எ) கலைதாசன்(21). பொது அமைதிக்கும், பொது சொத்துக்கும் குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டு வந்த இவரை போலீஸார் கைது செய்து, கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர். இதுபோன்ற, சட்டவிரோதச் செயல்களை கட்டுப்படுத்தும்விதமாக, இவரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார்.
 இதனை ஏற்று மாவட்ட ஆட்சியர் இல.சுப்பிரமணியன் பிறப்பித்த உத்தரவையடுத்து, கடலூர் மத்திய சிறையில் விசாரணைக் கைதியாக இருந்து வந்த கலைதாசனை குண்டர் சட்டத்தின் கீழ் போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT