விழுப்புரம்

ஆற்றுப் பாலத்திலிருந்து குதித்து இளைஞர் பலி

2nd Jul 2019 08:42 AM

ADVERTISEMENT

விழுப்புரம் அருகே தென்பெண்னை ஆற்றின் பாலத்திலிருந்து குதித்து இளைஞர் உயிரிழந்தார்.
 விழுப்புரம் அருகே பிடாகம் கிராமத்தைச் சேர்ந்த பரமசிவம் மகன் ஜெயராமன்(19). இவர், ஞாயிற்றுக்கிழமை இரவு அதே பகுதியைச் சேர்ந்த பிச்சைக்காரன் மகன் சக்தி(19) என்பவருடன்
 இரு சக்கர வாகனத்தில் பேரங்கியூர் சென்றார். பின்னர், இருவரும் இரு சக்கர வாகனத்தில் வீட்டுக்குத் திரும்பிக்கொண்டிருந்தனர்.
 அப்போது, தென்பெண்ணை ஆற்றுப்பாலத்தில் வரும்போது, இருவருக்கும் இடையே வாய்த் தகராறு ஏற்பட்டதாம். இதனால் இரு சக்கர வாகனத்தை பாலத்தின் மேல் நிறுத்திவிட்டு, தகராறில் ஈடுபட்டனர். அப்போது, திடீரென ஜெயராமன் பாலத்தின் மேல் இருந்து தென்பெண்ணை ஆற்றில் குதித்தாராம். சுமார் 25 அடி பள்ளத்தில் இருந்த ஆற்று மணலில் விழுந்த ஜெயராமன் பலத்த காயமடைந்தார். பின்னர், தகவல் அறிந்த உறவினர்கள் விரைந்து வந்து ஜெயராமனை மீட்டு, விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவர் உயிரிழந்தார்.
 இது தொடர்பாக ஜெயராமனின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக, அவரது தாய் ஜெயந்தி திருவெண்ணெய் நல்லூர் போலீஸில் புகார் செய்துள்ளார். போலீஸார் சந்தேக மரணம் என வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT