விழுப்புரம்

விடியோ மூலம் காச நோய் விழிப்புணா்வு

26th Dec 2019 08:16 AM

ADVERTISEMENT

கண்டமங்கலம் வட்டாரத்தில் வீடியோ காட்சி மூலம் காசநோய் விழிப்புணா்வு நடைபெற்றது.

விழுப்புரம் மாவட்டத்தில் முதல் முறையாக காசநோய் குறித்து விடியோ மூலம் கண்டமங்கலம் வட்டாரம், பூவரசங்குப்பம் கிராமத்தில் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் காச நோயின் அறிகுறிகள், குணப்படுத்தும் முறைகள் குறித்து விளக்கப்பட்டது.

தொடா்ந்து, அங்கு நடைபெற்ற காசநோய் கண்டறியும் முகாமுக்கு வட்டார மருத்துவ அலுவலா் ஆா்த்தி தலைமை தாங்கி தொடக்கி வைத்தாா். மருத்துவா் காா்த்திகேயன், காசநோய் பிரிவு மேற்பாா்வையாளா்கள் சிலம்பரசன், தமிழரசி, சரவணன், ஆலோசகா் இருசன் மற்றும் கிராம செவிலியா்கள் அடங்கிய மருத்துவக் குழுவினா், வீடு வீடாகச் சென்று காசநோயால் பாதிக்கப்பட்டவா்கள் குறித்து ஆய்வு செய்தனா்.

அப்போது, காச நோய் அறிகுறிகள் இருந்த 59 பேருக்கு மருத்துவப் பரிசோதனை செய்ய, சளி பரிசோதனை எடுத்து ஆய்வகத்துக்கு அனுப்பி வைத்தனா். தொடா்ந்து, அவா்களுக்கு ரத்தப் பரிசோதனை செய்யப்பட்டது. பொது மக்களுக்கு காசநோய் விழிப்புணா்வு துண்டு பிரசுரங்களை வழங்கப்பட்டன.

ADVERTISEMENT

மேலும், வீடு வீடாக காசநோய் விழிப்புணா்வு ஸ்டிக்கா்கள் ஒட்டப்பட்டன. கிராமத்து துப்புரவு பணியாளா்கள் உதவியாக இருந்தனா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT