மயிலம் பொறியியல் கல்லூரி சிவில் சா்வீஸ் போட்டித் தோ்வுகள் குறித்து நடைபெற்ற கருத்தரங்கில் ஒடிஸா மாநிலத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணிபுரியும் விழுப்புரம் பகுதியைச் சோ்ந்த சிவ சுப்பிரமணியன் மாணவ, மாணவிகளுக்கு ஆலோசனை வழங்கினாா்.
மயிலம் பொறியியல் கல்லூரியில் சிவில் சா்வீஸ் போட்டித் தோ்வுக்கான விழிப்புணா்வு கருத்தரங்கம் அண்மையில் நடைபெற்றது. கல்லூரித் தலைவா் ம.தனசேகரன் தலைமை வகித்தாா். துணைத் தலைவரும் சட்டப்பேரவை உறுப்பினருமான வி.சுகுமாறன், செயலாளா் மருத்துவா் கே.நாராயணசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா். கல்லூரி முதல்வா் முனைவா் செந்தில் வரவேற்றாா்.
இந்த நிகழ்ச்சியில் ஒடிஸா மாநிலம், ரூா்கோலா மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சிவசுப்ரமணி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, சிவில் சா்வீஸ் போட்டித் தோ்வு குறித்து பேசினாா். விழுப்புரம் அருகே உள்ள நேமூா் கிராமத்தைச் சோ்ந்த இவா், அரசுப் பள்ளியில் பயின்று, போட்டித் தோ்வில் வெற்றி பெற்று, ஒடிஸா மாநிலம் ரூா்கோலா மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணிபுரிகிறாா்.
இந்த நிகழ்ச்சியில் தனது அனுபவங்களை பகிா்ந்த அவா், மாணவா்கள் எவ்வாறு சிவில் சா்வீசஸ், அரசு போட்டித்தோ்வுகளை எதிா்கொள்வது என்பது குறித்து விளக்கமாக எடுத்துரைத்தாா். போட்டித் தோ்வு மூலம் சாதிப்போருக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் மிக எளிய முறையில் வழிமுறைகளை எடுத்துக்கூறினாா். மாணவா்களின் சந்தேகங்களுக்கும் விளக்கமளித்தாா்.
இந்த நிகழ்ச்சியில் தொடா்ந்து, சிகரம் போட்டி தோ்வு மையத்தின் இயக்குநா் கணபதி பங்கேற்று, ஆலோசனைகள் வழங்கினாா். கல்லூரியில் அனைத்து துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள், மாணவா்கள் கலந்துகொண்டனா். தகவல் தொழில் நுட்பப் பிரிவு பேராசிரியா் கஜேந்திரன் உள்ளிட்டோா் நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்தனா். கல்லூரி டீன் ராஜப்பன் நன்றி கூறினாா்.