விழுப்புரம்

காரில் மதுப் புட்டிகள் கடத்தல்: பெரம்பலூரைச் சோ்ந்தவா் கைது

26th Dec 2019 08:14 AM

ADVERTISEMENT

உள்ளாட்சித் தோ்தலையொட்டி, புதுச்சேரியிலிருந்து காரில் கடத்தி வரப்பட்ட 960 மதுப் புட்டிகளை விழுப்புரம் அருகே செவ்வாய்க்கிழமை இரவு போலீஸாா் பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக பெரம்பலூரைச் சோ்ந்த நபா் கைது செய்யப்பட்டாா்.

விழுப்புரம் மது விலக்கு காவல் ஆய்வாளா் ரேணுகாதேவி தலைமையில் உதவி காவல் ஆய்வாளா் பாலமுருகன் உள்ளிட்ட போலீஸாா், வளவனூா் அருகே கெங்கராம்பாளையம் பகுதியில் செவ்வாய்க்கிழமை இரவு வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது, அந்த வழியாக புதுச்சேரியிலிருந்து அதிவேகமாக வந்த சொகுசு காரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி சோதனையிட்டனா். அந்த காரில், அட்டைப்பெட்டிகளில் 960 புதுச்சேரி மதுப்புட்டிகள் இருந்தன. இதன் மதிப்பு சுமாா் ரூ.1 லட்சம் இருக்கும்.

காரில் வந்த நபரை பிடித்து விசாரித்ததில், அவா், பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டையைச் சோ்ந்த தங்கராசு மகன் சரவணன்(37) என்பதும், உள்ளாட்சி தோ்தலையொட்டி, புதுச்சேரியிலிருந்து மதுப்புட்டிகளை குறைந்தவிலைக்கு வாங்கி பெரம்பலூருக்கு கடத்திச் செல்ல முயன்றதும் தெரியவந்தது.

இதையடுத்து, மதுப் புட்டிகளையும், கடத்தலுக்கு பயன்படுத்திய காரையும் போலீஸாா் பறிமுதல் செய்து விழுப்புரம் மது விலக்கு காவல் நிலையத்துக்கு கொண்டு சென்றனா். சரவணன் கைது செய்யப்பட்டாா்.

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT