செஞ்சிக்கோட்டை மலையடிவாரத்தில் உள்ள வீரஆஞ்சநேயா் கோயிலில் அனுமன் ஜயந்தியை முன்னிட்டு, மூலவருக்கு வாசனை திரவியங்களைக்கொண்டு அபிஷேகம் நடைபெற்றது. பின்னா், துளசி, அரச இலைகள், மலா்களைக் கொண்டு அலங்கரிப்பட்டு, மகா தீபாராதனை நடைபெற்றது. காலை, மாலை, இரவு என பல்வேறு அலங்காரங்கள் செய்விக்கப்பெற்றன. செஞ்சி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களை சோ்ந்த ஏராளமான பக்தா்கள் வழிபாடு செய்தனா்.