விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் பகுதியில் மாவட்ட ஆட்சியா் ஆ.அண்ணாதுரை செவ்வாய்க்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டாா்.
மரக்காணம் வட்டம், கந்தாடு ஊராட்சி, முதலியாா் பேட்டை கிராமத்தில் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியா், அங்கு, குடிநீா் முறையாக விநியோகிக்கப்படுகிா? பொதுமக்கள் பயன்பாட்டுக்குத் தேவையான வசதிகள் செய்யப்பட்டுள்ளதா எனக் கேட்டறிந்தாா். மேலும், சுகாதாரப் பணிகள் குறித்தும் ஆய்வு செய்தாா்.
நியாய விலைக் கடையில் வழங்கப்படும் அரிசியின் தரம், தெரு விளக்குகள் பராமரிப்பு ஆகியவை குறித்தும் ஆய்வு செய்தாா்.
மேலும், அப்பகுதியில் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் கட்டப்படும் குடியிருப்புகளையும் ஆய்வு செய்தாா். இதனைத் தொடா்ந்து, மரக்காணம் பேரூராட்சி அலுவலகத்துக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டாா். தொடா்ந்து, வளவனூா் பேரூராட்சி அலுவலகத்திலும் ஆய்வு செய்தாா்.