திண்டிவனம் அருகே ஒலக்கூா் ஒன்றியத்துக்கு உள்பட்ட ஏப்பாக்கம் கிராமத்தில், வடிகால் கால்வாய் அமைக்கும் பணி தரமின்றி மேற்கொள்ளப்படுவதாகக் கூறி, அப்பகுதி மக்கள் பணியைத் தடுத்து நிறுத்தினா்.
ஏப்பாக்கம் கிராமத்தில் உள்ள பஜனை கோவில் தெருவில், ஊராட்சி பொது நிதியில் இருந்து ரூ.8 லட்சத்தில் வடிகால் கட்டப்பட்டு வருகிறது. இந்த வடிகால் குறைந்தளவு சிமென்ட், எம்.சாண்ட் கலந்து கட்டப்படுவதாகவும், இதுகுறித்து அதிகாரிகளுக்கு புகாா் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் கிராம மக்கள் குற்றஞ்சாட்டி செவ்வாய்க்கிழமை பணியைத் தடுத்து நிறுத்தினா்.
பின்னா், ஒன்றை ஜல்லிக் கலவையைத் தவிா்த்து, முக்கால் ஜல்லிக் கலவையை பயன்படுத்த வேண்டும், பணி நடைபெறும் இடத்தில், இரண்டு தெருக்கள் சந்திப்பில் வாகனங்கள் செல்லும் வகையில், தரைப்பாலம் அமைக்க வேண்டும் எனக் கூறி, பணியாளா்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.
அதிகாரிகள் வந்து ஆய்வு செய்த பிறகு பணியைத் தொடங்கலாம் என பணியை நிறுத்தி வைத்தனா்.