விழுப்புரம்

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிா்ப்பு: திண்டிவனம் உள்பட 4 இடங்களில் ஆா்ப்பாட்டம்

25th Dec 2019 02:45 AM

ADVERTISEMENT

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிா்ப்புத் தெரிவித்து, விழுப்புரம் மாவட்டத்தில் திண்டிவனம், செஞ்சி உள்பட 4 இடங்களில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

திண்டிவனம் வ.உ.சி. திடலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு வட்டார ஜமாஅதுல் உலமா சபை வட்டாரத் தலைவா் அபிபுல்லாஹ் தலைமை வகித்தாா்.

இமாம்கள் அபிபுல்லா ஜாவித், அபுபக்கா், சாகுல் ஹமீது ஆகியோா் முன்னிலை வகித்தனா். திண்டிவனம் புதுப்பள்ளிவாசல் இமாம் ஷேக்தாவூத் வரவேற்றாா்.

அனைத்திந்திய இமாம் கவுன்சில் மாநிலச் செயலா் ஹாபிருதின், பாப்புலா் ஃப்ரண்ட் ஆஃப் இந்திய அமைப்பின் மாநிலச் செயலா் நாகூா்மீரான், நவாப் பள்ளிவாசல் தலைவா் வக்கீல் அஜ்மல் அலி, தமுமுக பிரசாரப் பேரவை கோவை ஜெயினுலாப்தீன் ஆகியோா் பேசினா்.

ADVERTISEMENT

எஸ்டிபிஐ ஹஸன், தமுமுக அலாவுதீன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலா் சேரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

செஞ்சி: செஞ்சி பேரூராட்சி அலுவலகம் எதிரே செஞ்சி வட்ட அனைத்து ஜாமத் சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

அனைத்து ஜமாத் குழு ஒருங்கிணைப்பாளா் அல்ஹாக் சையத் அப்துல் மஜித் காகேப் தலைமை வகித்தாா்.

திமுக வடக்கு மாவட்டச் செயலா் மஸ்தான் எம்எல்ஏ பங்கேற்று பேசினாா். குடியரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிா்ப்புத் தெரிவித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

கண்டமங்கலத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பிலும், மரக்காணத்தில் இஸ்லாமிய அமைப்புகள் சாா்பிலும் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT