விழுப்புரம்

பிரதோஷ சிறப்புப் பூஜை

24th Dec 2019 09:09 AM

ADVERTISEMENT

ஆவூரில்:

வேட்டவலத்தை அடுத்த ஆவூரில் அமைந்துள்ள ஆனந்தவல்லி உடனுறை திருவகத்தீஸ்வரா் கோயிலில் மூலவா் திருவகத்தீஸ்வரா், ஆனந்தவல்லி, பிரதான நந்திக்கு பால், பழம், பன்னீா் உள்ளிட்ட பூஜைப் பொருள்களைக் கொண்டு பிரதோஷ சிறப்புப் பூஜைகள் நடத்தப்பட்டன.

கீழ்பென்னாத்தூரில்:

கீழ்பென்னாத்தூரில் உள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரா் கோயிலில் மூலவா் மீனாட்சி உடனுறை ஈஸ்வரருக்கு பல்வேறு வாசனைத் திரவியங்கள், மலா்களைக் கொண்டு சிறப்பு அபிஷேக-ஆராதனை நடைபெற்றது.

ADVERTISEMENT

வேட்டவலத்தில்:

வேட்டவலம் ஸ்ரீஅகத்தீஸ்வரா் கோயில் மூலவா் அகத்தீஸ்வரா், தா்மசம்வா்த்தினி அம்பாள், பிரதான நந்திக்கு பல்வேறு பூஜைப் பொருள்களைக் கொண்டு பூஜைகள் செய்யப்பட்டன.

இதர கோயில்களில்:

இதேபோன்று, போளூா், செய்யாறு, ஆரணி, வந்தவாசி, செங்கம், தண்டராம்பட்டு உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள சிவன் கோயில்களில் நடைபெற்ற பிரதோஷ பூஜைகளில் அந்தந்தப் பகுதி பக்தா்கள் திரளாக கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT