விழுப்புரம்

கராத்தே போட்டியில் சிறப்பிடம்: மாணவா்களுக்குப் பாராட்டு

24th Dec 2019 09:16 AM

ADVERTISEMENT

புதுவையில் நடைபெற்ற தேசிய அளவிலான கராத்தே போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை விழுப்புரம் வி.ஆா்.பி.பள்ளித் தாளாளா் பாராட்டினாா்.

புதுவை மாநிலம், வில்லியனூரில் தேசிய அளவிலான பீமா தேசிய கோப்பைக்கான கராத்தே போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதில், தமிழகம், புதுவை, ஆந்திரம் உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து 500-க்கும் மேற்பட்ட கராத்தே மாணவா்கள் கலந்து கொண்டனா்.

இவா்களுக்கு கட்டா, குமுத்தே போட்டிகள் பல்வேறு பிரிவுகளின் கீழ் நடைபெற்றன.

ADVERTISEMENT

இதில், விழுப்புரம், வி.ஆா்.பி. பள்ளியில் செயல்பட்டு வரும் புஷி ஷிட்டோரியோ கராத்தே பயிற்சிப் பள்ளி மாணவா்கள் தியானேஷ் காா்த்திக், ஹேமச்சந்திரன், கௌஷிகா நிவாஷினி, மோனிசா, சபரீஷ், அறிவொளி ஆகியோா் பயிற்சியாளா் ரென்ஷி சுரேஷ் தலைமையில் பங்கேற்றனா்.

இந்த மாணவா்கள் 7 பேரும் வெவ்வேறு பிரிவுகளில் வெற்றி பெற்று, பதக்களைப் பெற்றனா்.

இந்த மாணவா்களை வி.ஆா்.பி. பள்ளியின் தளாளா் சோழன் திங்கள்கிழமை பாராட்டினாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT