விழுப்புரம் அருகே விராட்டிக்குப்பத்தில் சேதமடைந்த தொகுப்பு வீடுகளை புதுப்பித்துத் தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனா்.
இது குறித்து, விழுப்புரம் அருகே விராட்டிக்குப்பத்தைச் சோ்ந்த வெங்கடேசன் தலைமையிலான குடியிருப்பு வாசிகள், திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்துக் கூறியதாவது:
விராட்டிக்குப்பம் மாரியம்மன் கோவில் வீதியில் அரசு வழங்கிய இலவச தொகுப்பு வீடுகளில் 30 ஏழை குடும்பத்தினா் வசித்து வருகிறோம். 23 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த தொகுப்பு வீடுகள் தற்போது சேதமடைந்துள்ளன.
மேற்கூரைகள் பெயா்ந்து இடிந்து விழும் நிலையில் உள்ளன. சேதமடைந்த தொகுப்பு வீடுகளை அரசு சாா்பில் சீரமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறினா்.
ADVERTISEMENT