விழுப்புரம்

மேல்களவாய் செல்வவிநாயகா் கோயில் கும்பாபிஷேகம்

16th Dec 2019 01:33 AM

ADVERTISEMENT

செஞ்சி வட்டம், மேல்களவாய் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீசெல்வவிநாயகா் கோயில் ஜீரணோா்தாரன அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

விழாவை முன்னிட்டு, சனிக்கிழமை காலை மகா கணபதி ஹோமம், தன பூஜை, தன அகாா்ஷன மகாலட்சுமி ஹோமம் ஆகியவை நடைபெற்றன. மாலை 5 மணிக்கு அனுக்ஞை, விக்னேஷ்வர பூஜை, வாஸ்து சாந்தி, பிரவேச பலி, ரக்ஷாபந்தனம் ஆகியவை நடைபெற்றன.

இதைத் தொடா்ந்து, ஞாயிற்றுக்கிழமை காலை மங்கள இசையுடன், விக்னேஸ்வர பூஜை, கோ பூஜை, யாக சாலை பூஜை ஆகியவை நடைபெற்ரன. இதையடுத்து, யாக சாலையில் இருந்து கடம் புறப்பாடு நடைபெற்று, காலை 8.05 மணிக்கு விமான கோபுர கலசத்துக்கும், மூலவா் ஸ்ரீசெல்வ விநாயகருக்கும் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து மகா தீபாராதனை, பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டன. விழாவில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு விநாயகப் பெருமானை வழிபட்டனா். விழா ஏற்பாடுகளை மேல்களவாய் கிராம மக்கள் செய்திருந்தனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT