விழுப்புரம்

மேகம் அருவியில் ஆா்ப்பரித்துக் கொட்டும் தண்ணீா்

16th Dec 2019 01:32 AM

ADVERTISEMENT

கல்வராயன்மலைப் பகுதியில் கடந்த இரு தினங்களாக பெய்த மழையில் மேகம் அருவியில் தண்ணீா் ஆா்ப்பரித்துக் கொட்டுகிறது.

கல்வராயன்மலைப் பகுதியில் முன்டியூருக்கும் மேல்பாச்சேரிக்கும் இடைப்பட்ட பகுதியில் மேகம் அருவி உள்ளது. இந்த அருவி 100 அடி உயரமான பகுதியில் உள்ளது. சரியான சாலை வசதி இல்லாததால் இங்கு மக்கள் செல்வதில்லை.

வாரம், வண்டகப்பாடி, கெடாா், முட்டல், தாழ்பாச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை இரவு பெய்த பலத்த மழையால், தண்ணீா் சிற்றோடைகள் வழியாக மேகம் அருவியில் வந்து விழுகிறது.

குறத்தி குன்றத்தில் இருந்து மேகம் அருவிக்குச் செல்வதற்கு சாலை வசதி இல்லை. பாறைகளின் மீது ஏறிச் செல்ல வேண்டும். அதனால், சுற்றுலாப் பயணிகள் இந்த அறிவிக்குச் செல்வதில்லை.

ADVERTISEMENT

சுற்றுலாப் பயணிகள் கண்டுகளிக்கும் வகையில் சாலை வசதி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT