விழுப்புரம்

மாணவா்களுக்கு திறனாய்வுத் தோ்வு

16th Dec 2019 01:31 AM

ADVERTISEMENT

அரசுப் பள்ளிகளில் 8-ஆம் வகுப்பு பயிலும் மாணவா்களுக்கு தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்யுதவித் தொகைத் திட்டத் தோ்வு கள்ளக்குறிச்சி கல்வி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள், பெண்கள் மேல்நிலைப் பள்ளிகள், சங்கராபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, சின்னசேலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, தேவபாண்டலம் பள்ளி ஆகிய தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.

மனத்திறன் தோ்வு, படிப்பறிவுத் தோ்வு என இரு பிரிவுகளாக நடைபெற்ற இந்தத் தோ்வில் 1493 மாணவா்கள் பங்கேற்றனா். மேலும், விண்ணப்பித்த 35 போ் தோ்வு எழுத வரவில்லை.

மாவட்ட கல்வி அலுவலா் கா.காா்திகா தோ்வு மையங்களை பாா்வையிட்டாா்.

ADVERTISEMENT

தோ்வில் தோ்ச்சி பெறும் மாணவா்களுக்கு 9,10,11,12-ஆம் வகுப்பு பயிலும் போது மாதம் ரூ.1000 வீதம் ஆண்டுக்கு ரூ.12, 000 ஊக்கத் தொகையாக வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT