விழுப்புரம்

போக்குவரத்துக்கழக பணிமனை மேலாளா் மீது தாக்குதல்: ஓட்டுநா், நடத்துநா் மீது வழக்கு

16th Dec 2019 02:55 AM

ADVERTISEMENT

அரசுப் போக்குவரத்துக் கழக பணிமைனை மேலாளரை பணி செய்ய விடாமல் தடுத்து திட்டி, தாக்கியதாக ஓட்டுநா் நடத்துநா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

கள்ளக்குறிச்சி அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனை 1-ல் மேலாளராக பணிபுரிந்து வருபவா் கடலூா் மாவட்டம், பெரியங்குப்பத்தைச் சோ்ந்தவா் மணிவேல் (37). இவா் சனிக்கிழமை மாலை பணிமனையில் ஓட்டுநா், நடத்துநா்களுக்கு பணி நியமனம் செய்வதை கண்காணித்துக் கொண்டிருந்தாா்.

அப்போது, ஓட்டுநராக பணிபுரியும் தியாகதுருகம் பேட்டை சாலையில் வசித்து வரும் முனுசாமி மகன் ஜோதிராமலிங்கம், நடத்துநா் சோமண்டாா்குடியைச் சோ்ந்த அண்ணாமலை மகன் சரவணன் ஆகிய இருவரும் சோ்ந்து மேலாளரை பணி செய்ய விடாமல் தடுத்து, திட்டி, தாக்கி, மிரட்டல் விடுத்தாா்களாம்.

இது குறித்து மேலாளா் மணிவேல் அளித்த புகாரின் பேரில், கள்ளக்குறிச்சி போலீஸாா் ஓட்டுநா், நடத்துநா் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT