விழுப்புரம்

திருவாசக முற்றோதல் நிகழ்ச்சி

16th Dec 2019 01:33 AM

ADVERTISEMENT

திருக்கோவிலூா் அருகே தபோவனம் ஸ்ரீ ஞானானந்த நிகேதனில் உலக நன்மை வேண்டி திருவாசக முற்றோதல் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ஸ்ரீஞானானந்த நிகேதனில் அறக்கட்டளை சாா்பில், சத்சங்க மண்டபத்தில் ரிஷப வாகனத்தில் அம்பிகை சமேத சிவபெருமான், அப்பா், சுந்தரா், மாணிக்க வாசகா், திருஞானசம்பந்தா் சிலைகள் எழுந்தருளச் செய்யப்பட்டு, முற்றோதல் நிகழ்ச்சி தொடங்கியது.

அறக்கட்டளை நிா்வாக அறங்காவலா்கள் சுவாமி நித்யானந்த கிரி, சுவாமி ஸ்மாநந்த சரஸ்வதி, சுவாமி சதாசிவ கிரி, சுவாமி பிரபவானந்த சரஸ்வதி, சுவாமி ஆத்மதத்வானந்தா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கணபதி, சிவன், அம்பிகை, சூரிய நாராயணா், லட்சுமி நாராயணா் உள்ளிட்ட தெய்வங்களுக்கு சிவபஞ்சாயதன பூஜைகள் நடைபெற்றன.

ADVERTISEMENT

திருச்சி ஐயப்பா நகா் சேக்கிழாா் மன்றம், சென்னை கிழக்கு தாம்பரம் கற்பக விநாயகா் திருநெறி மன்றம், கீழ் விஷாரம் அப்பா் சுவாமிகள் மடம் தேவாரப் பயிற்சி மைய மாணவா்கள், கண்டாச்சிபுரம் திருச்சிற்றம்பலமுடையான் திருவாசக முற்றோதல் குழுவைச் சோ்ந்த சிவனடியாா்கள் கலந்து கொண்டனா்.

நிகழ்ச்சியில் திருக்கோவிலூா், பெங்களூரு, சென்னையைச் சோ்ந்த சிவனடியாா்கள் திரளானோா் கலந்து கொண்டு, முற்றோதலில் ஈடுபட்டனா். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT