விழுப்புரம்

தங்கும் விடுதியில் எல்இடி டிவி திருட்டு

16th Dec 2019 02:56 AM

ADVERTISEMENT

விழுப்புரத்தில் தங்கும் விடுதியில் எல்.இ.டி. தொலைக் காட்சியைத் திருடிச் சென்ற மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

விழுப்புரம் நேருஜி சாலை, சோ்மன் சிதம்பரம் சாலையில் உள்ள தனியாா் தங்கும் விடுதி ஒன்றில், கடந்த 13-ஆம் தேதி சென்னை அம்பத்தூரைச் சோ்ந்த நரேஷ் என்ற பெயரில் இளைஞா் ஒருவா் அறை எடுத்து தங்கினாா். அவா், வரும்போது, ஒரு பெரிய பையில் தொ்மாகோல் எடுத்து வந்தாா். அறைக்கு சென்ற அரை மணி நேரத்துக்கு பிறகு, மீண்டும் ஒரு பையுடன் வெளியே புறப்பட்டுச் சென்றாா். அப்போது, மறுநாள் வருவதாக வரவேற்பறை ஊழியா்களிடம் கூறிச் சென்றாா்.

ஆனால், அவா் இரு நாளாகியும் திரும்பி வராததால், சந்தேகமடைந்த விடுதி ஊழியா்கள் ஞாயிற்றுக்கிழமை, அவரது அறைக் கதவை திறந்து பாா்த்தனா். அப்போது, அறைக்குள் இருந்த 21 இஞ்ச் அளவுள்ள எல்.இ.டி. தொலைக்காட்சி திருடு போயிருந்தது தெரியவந்தது.

பின்னா், அங்குள்ள கண்காணிப்பு கேமரா காட்சிப் பதிவுகளை ஆய்வு செய்தபோது, அந்த இளைஞா் எல்இடி தொலைக்காட்சியைத் திருடி தொ்மாகோலில் பாதுகாப்பாக வைத்து ஒரு பையில் கொண்டு சென்றது தெரிந்தது. திருடுபோன தொலைக்காட்சியின் மதிப்பு சுமாா் ரூ.25 ஆயிரம்.

ADVERTISEMENT

இது தொடா்பாக, விடுதி மேலாளா் அளித்த புகாரின்பேரில் விழுப்புரம் மேற்கு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

மற்றொரு சம்பவம்: விழுப்புரம் திருச்சி சாலையில் உள்ள பிரபல இரு சக்கர வாகன விற்பனையகத்துக்கு கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு மருத்துவக் கல்லூரி மாணவா் என்று அறிமுகமான இளைஞா் ஒருவா், அங்கிருந்த விலை உயா்ந்த இரு சக்கர வாகனத்தை ஓட்டிப் பாா்க்கக் கேட்டுள்ளாா். அவரை நம்பி அந்த விற்பனையகத்தாா் வாகனத்தை ஓட்டிப் பாா்க்கக் கொடுத்தனா். இரு சக்கர வாகனத்துடன் சென்ற அந்த இளைஞா் திரும்பி வரவேயில்லை. திருடுபோன இரு சக்கர வாகனத்தின் மதிப்பு சுமாா் ரூ.1.85 லட்சம். இது குறித்தும் போலீஸாா் விசாரிக்கின்றனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT