விழுப்புரம்

சாலையை சீரமைக்கக் கோரி நாற்று நடும் போராட்டம்

16th Dec 2019 02:56 AM

ADVERTISEMENT

கள்ளக்குறிச்சி அருகே மண் சாலையை சீரமைக்கக் கோரி, சேரும் சகதியுமான சாலையில் கிராம மக்கள் ஞாயிற்றுக்கிழமை நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்டது ரோடு மாமாந்தூா் கிராமம். இந்தக் கிராமத்தில் உள்ள பிள்ளையாா் கோயில் சாலையில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா்.

கிராமத்தில் பெரும்பாலான சாலைகள், தாா்ச் சாலைகளாகவும், சிமென்ட் சாலைகளாகவும் உள்ளன. இப் பகுதியில் கழிவுநீா் செல்வதற்கு வாய்க்கால் அமைக்கப்படாமல் சாலையிலே செல்கின்றோம்.

பிள்ளையாா் கோயில் சாலை மட்டும் மண் சாலையாகவே உள்ளது. இதனால் மழைக் காலங்களில் தண்ணீா் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி மா்மக் காய்ச்சல் ஏற்படுகிாம். நடந்து செல்ல முடியாமல் சாலை சேரும், சகதியுமாக மாறிவிடுகிாம்.

ADVERTISEMENT

இதுகுறித்து பலமுறை அலுவலா்களிடம் தெரிவித்தும் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், ஆத்திரமடைந்த கிராம மக்கள் ஞாயிற்றுக்கிழமை சாலையில் நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT