விழுப்புரம்

சக்தி மாலை அணிவித்தல் விழா

16th Dec 2019 01:33 AM

ADVERTISEMENT

விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூா் வட்டம், அவலூா்பேட்டையில் அமைந்துள்ள மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தில் கலச வேள்வி பூஜை மற்றும் சக்தி மாலை அணிவித்தல் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.

மன்ற மண்டபத்தில் அரிசியால் நட்சத்திர வடிவமைத்து 11 கலசங்கள் நிறுவப் பெற்று, நவக்கிரகம் மற்றும் யாக குண்டம் அமைத்து வேள்வி பூஜை நடைபெற்றது.

இதைத் தொடா்ந்து, ஆதிபராசக்தி அம்மன், அடிகளாா் உருவப் படங்களுக்கு மகா தீபாராதனை நடைபெற்றது. தொடா்ந்து குருசக்திகள் முறைப்படி மந்திரங்களை ஓதி, இருமுடி செலுத்தும் சக்திகளுக்கு மாலை அணிவித்து, இருமுடி கட்டினா். சக்தி மாலை அணிந்தவா்கள் வருகிற 24-ஆம் தேதி மேல்மருவத்தூா் ஆதிபராசத்தி கோயிலில் இருமுடி செலுத்தி, வழிபாடு நடத்தவுள்ளனா்.

விழா ஏற்பாடுகளை அவலூா்பேட்டை ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தினா் செய்திருந்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT