விழுப்புரம்

காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் பூஜை

16th Dec 2019 02:56 AM

ADVERTISEMENT

கள்ளக்குறிச்சி புதிய மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை சிறப்பு பூஜை நடைபெற்றது.

ஏற்கெனவே, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகம் துணைக் கண்காணிப்பாளா் அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வந்தது.

தற்போது சேலம்-சென்னை நெடுஞ்சாலையில் உள்ள தனியாா் கல்லூரிக்கு மாற்றப்பட்டுள்ளது.

இந்த அலுவலகத்தில் பணிகள் நடைபெற்று நிறைவடைந்து அதற்கான பூஜை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ADVERTISEMENT

பூஜையில் காவல் துணைக் கண்காணிப்பாளா் ந.ராமநாதன், திருக்கோவிலூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் இ. மகேஷ் மற்றும் காவல் ஆய்வாளா்கள், உதவி ஆய்வாளா்கள், தனிப் பிரிவு காவல் உதவி ஆய்வாளா்கள், காவலா்கள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

 

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT