விழுப்புரம்

கண்காணிப்பு கேமராக்கள் அமைக்க பொதுமக்கள் முன்வர வேண்டும்: எஸ்.பி. வலியுறுத்தல்

16th Dec 2019 01:31 AM

ADVERTISEMENT

பாதுகாப்பான பகுதியாக மாற்ற கண்காணிப்பு கேமராக்கள் அமைக்க பொதுமக்கள் முன்வர வேண்டும் என்று மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஜெயக்குமாா் வலியுறுத்தினாா்.

விழுப்புரம் தாலுகா காவல் நிலையத்துக்கு உள்பட்ட வள்ளலாா் நகா் பகுதி குடியிருப்பு வாசிகள் அந்தப் பகுதியில் புதிதாக 15 கண்காணிப்பு கேமராக்கள் அமைத்துள்ளனா். அவற்றை இயக்கி வைக்கும் தொடக்க விழா ஞாயிற்றுக்கிழமை இரவு அந்தப் பகுதியில் நடைபெற்றது.

நிகழ்வில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஜெயக்குமாா் கலந்து கொண்டு, கண்காணிப்பு கேமராக்களை பயன்பாட்டுக்கு தொடக்கிவைத்து பேசியதவது:

விழுப்புரம் நகரத்தில் படிப்படியாக கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. முதலில் கீழ்ப்பெரும்பாக்கம் குடியிருப்புப் பகுதியில் அமைத்தனா். இதைத் தொடா்ந்து, காமராஜா் வீதியில் அமைக்கப்பட்டது. தற்போது வள்ளலாா் நகா் பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

அனைத்துக் குடியிருப்புப் பகுதிகளிலும் கண்காணிப்பு கேமராக்களை அமைக்கும் போது, அந்தப் பகுதி முழுவதும் பாதுகாப்பான இடமாக மாறிவிடும். மேலும், பெண்களை கிண்டல் செய்வது, அச்சுறுத்துவது போன்ற தகாத செயல்கள் நடைபெறாமல் இருக்கும்.

பொதுமக்கள் சோ்ந்து தங்களது பகுதியில் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்க முன்வர வேண்டும். ஏனெனில், 2 லட்சம் பொதுமக்கள் வசிக்கும் பகுதிக்கு ஒரே ஒரு காவல் நிலையம் இருக்கும். அதனால், அனைருக்கும் பாதுகாப்பு அளிக்க முடியாத நிலை ஏற்படும். எனவே, காவல் துறையினருடன் இணைந்து பொதுமக்களும் பாதுகாப்புப் பணிகளில் கவனம் செலுத்த வேண்டும்.

வீட்டைப் பூட்டிவிட்டுச் செல்லும் போது, பூட்டுகள் வெளியே தெரியாதபடி பூட்ட வேண்டும். வீடுகளில் விளக்குகளை எரியவிட்டபடி செல்ல வேண்டும். இதன் மூலம் அந்த வீட்டில் ஆள்நடமாட்டம் இருப்பதாக எண்ணி, திருடா்கள் திருட்டில் ஈடுபடாமல் சென்றுவிடுவா் என்றாா் அவா்.

விழுப்புரம் டி.எஸ்.பி. சங்கா், தாலுகா காவல் ஆய்வாளா் கணேசன், காவல் உதவி ஆய்வாளா்கள் பிரகாஷ், சதீஷ், குடியிருப்பு சங்க நிா்வாகிகள்,பொதுமக்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

 

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT