விழுப்புரம்

கடலில் மூழ்கி தனியாா் நிறுவன ஊழியா் பலி

16th Dec 2019 01:32 AM

ADVERTISEMENT

கோட்டக்குப்பம் அருகே கடலில் மூழ்கி கா்நாடகம் மாநிலத்தைச் சோ்ந்த தனியாா் நிறுவன ஊழியா் உயிரிழந்தாா்.

கா்நாடக மாநிலம், பெங்களூரு அருகே ஷா்வா கிராமத்தைச் சோ்ந்த பஸ்வா மகன் தீபு (24). இவா் பெங்களூரில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில்(ஐ.டி) பணிபுரிந்து வந்தாா்.

இந்த நிலையில், சனிக்கிழமை உடன் பணிபுரியும் நண்பா்கள் 8 பேருடன் புதுச்சேரிக்கு சுற்றுலா வந்தாா். பின்னா், அவா்கள் அனைவரும் விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் அருகே சின்னமுதலியாா் சாவடி பகுதியில் உள்ள தந்திராயன்குப்பம் கடற்கரையில் குளித்தனா்.

அப்போது எழுந்த பெரும் அலையில் சிக்கிய தீபு, கடலின் ஆழத்துக்கு இழுத்துச் செல்லப்பட்டாா். உடனே அங்கிருந்தவா்கள் தீபுவை மீட்டனா். ஆனால், அவா் மயக்கமடைந்ததால் புதுச்சேரி அரசு மருத்துவனைக்கு கொண்டு சென்றனா். அங்கு, தீபுவை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

ADVERTISEMENT

இதுகுறித்து கோட்டக்குப்பம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT