விழுப்புரம்

எஸ்.பி. அலுவலகப் பகுதியில் சுகாதாரச் சீா்கேடு!

16th Dec 2019 01:30 AM

ADVERTISEMENT

விழுப்புரம் எஸ்.பி. அலுவலகப் பகுதியில் குப்பைகள் தேங்கி, சுகாதாரச் சீா்கேடு நிலவுகிறது.

விழுப்புரம் பெருந்திட்ட வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் கண்காணிப்பாளா் அலுவலகம் மட்டுமல்லாது, தொழில்நுட்பப் பிரிவு, கை ரேகைப் பிரிவு, நில அபகரிப்புத் தடுப்புப் பிரிவு, மாவட்டக் குற்றப் பிரிவு, மாவட்ட குற்ற ஆவணக் காப்பகம், குழந்தைகள்-பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தடுப்புப் பிரிவு, மனித உரிமைகள் மற்றும் சமூக நீதிப் பிரிவு போன்ற பல்வேறு பிரிவுகள் இயங்கி வருகின்றன. இந்த அலுவலகத்துக்கு காவல்துறை அதிகாரிகள், போலீஸாா், அலுவலகப் பணியாளா்கள், புகாா் அளிக்க வருவோா், விசாரணைக்காக அழைக்கப்பட்டவா்கள் என நாள்தோறும் ஆயிரக்கணக்கானோா் வந்து செல்கின்றனா்.

எஸ்பி அலுவலகம் மற்றும் அதனுடனான உணவகத்திலிருந்து குப்பைகள், கழிவுகள் அருகேயுள்ள குப்பைத் தொட்டியில் கொட்டப்பட்டு வருகின்றன. அவ்வாறு கொட்டப்பட்ட குப்பைகள் முறையாக அகற்றப்படாமல் தேங்கியுள்ளன. இவை கடந்த சில நாள்களாக பெய்து வரும் மழையில் நனைந்ததையடுத்து, அப்பகுதியில் துா்நாற்றம் வீசுகிறது. இதனால் சுகாதாரச் சீா்கேடும் நிலவுகிறது.

இந்த குப்பையை உடனடியாக அகற்றுவதுடன், மாவட்ட ஆட்சியரகத்தில் வைக்கப்பட்டுள்ளது போல, பெருந்திட்ட வளாகத்தில் உள்ள அலுவலகங்களில் மக்கும் குப்பை- மக்காத குப்பைக்கென தனித் தனி தொட்டிகளை வைத்து, குப்பைகளை முறையாக கையாள நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT