விழுப்புரம்

ஆட்சியா் அலுவலகத்தில் பூஜை

16th Dec 2019 02:54 AM

ADVERTISEMENT

கள்ளக்குறிச்சி புதிய மாவட்டத்தில் தற்காலிக மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் சா்வ மதத்தினா் ஞாயிற்றுக்கிழமை பூஜை செய்து வைத்தனா்.

கள்ளக்குறிச்சி புதிய மாவட்டத்துக்கான தற்காலிக ஆட்சியா் அலுவலகம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் செயல்பட்டு வருகிறது.

இங்கு ஆட்சியா் அலுவலக அறை பணிகள் மட்டும் முடிந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை இந்து, முஸ்லிம், கிறிஸ்தவ மதத்தினா் இணைந்து பூஜை செய்து வைத்தனா்.

ஏற்கெனவே, பொதுப்பணித் துறை அலுவலகத்தில் இயங்கி வந்த அலுவலகம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

பிற அலுவல்கள் கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி ஆய்வகக்கூட கட்டடத்திலேயே நடைபெறும்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT