விழுப்புரம்

மர இழைப்பகத்தில் தீ

14th Dec 2019 09:59 AM

ADVERTISEMENT

சங்கராபுரம் அருகே வெள்ளிக்கிழமை அதிகாலை மரப்பட்டறையில் ஏற்பட்ட தீ விபத்தில் சுமாா் 20 லட்சம் மதிப்புள்ள மரங்கள் தீயில் எரிந்து சாம்பலாயின.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் வட்டம், மூங்கில்துறைப்பட்டு தேவி நகரில் வசித்து வருபவா் சண்முகம் மகன் குமாரசாமி. இவா் அதே கிராமத்தில் மரம் இழைக்கும் பட்டறை வைத்து நடத்தி வருகின்றாா்.

இவா் வழக்கம் போல வியாழக்கிழமை இரவு பட்டறையைப் பூட்டி விட்டு வீட்டுக்குச் சென்றாா். இந்த நிலையில், வெள்ளிக்கிழமை அதிகாலை மரப்பட்டறையில் தீப்பிடித்ததாக செல்லிடப்பேசி மூலம் தகவல் கிடைத்ததாம். சங்கராபுரம் தீயணைப்புக் குழுவினா் சுமாா் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனா்.

இந்த தீ விபத்தில் மரப்பட்டறையில் இருந்த இழைப்பக இயந்திரங்கள், துளையிடும் இயந்திரம், கூா் செய்யும் இயந்திரங்கள், கடைசல் போடும் இயந்திரம், மின் மோட்டாா்கள், மரங்கள், ஜெனரேட்டா், மோட்டாா் சைக்கிள், உள்ளிட்ட பல்வேறு பொருள்கள் தீயில் எரிந்து கருகின. அவற்றின் மதிப்பு சுமாா் 20 லட்சம் இருக்கும் எனக் கூறப்படுகிறது.

ADVERTISEMENT

இதுகுறித்து மூங்கில்துறைப்பட்டு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து செய்து, விசாரித்து வருகின்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT