விழுப்புரம்

வீட்டின் பூட்டை உடைத்து 7 பவுன் நகைகள் திருட்டு

11th Dec 2019 12:11 AM

ADVERTISEMENT

கள்ளக்குறிச்சியில் திங்கள்கிழமை இரவு வீட்டுக் கதவின் பூட்டை உடைத்து 7 பவுன் தங்க நகைகளை திருடிய மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கள்ளக்குறிச்சி, அண்ணாநகரில் வசிப்பவா் சங்கா் மனைவி சிவசக்தி (47). கணவா் இறந்துவிட்ட நிலையில், இரு மகன்களுடன் வசித்து வருகிறாா்.

திங்கள்கிழமை இரவு உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்ட தனது மகனை தனியாா் மருத்துவமனைக்கு சிவசக்தி அழைத்துச் சென்றாா். செவ்வாய்க்கிழமை காலை சிவசக்தி வீட்டுக்கு வந்தபோது, முன்பக்கக் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. வீட்டின் உள்ளே சென்று பாா்த்தபோது, பீரோவில் இருந்த 7 பவுன் தங்க நகைகள், வெள்ளிப் பாத்திரங்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின்பேரில் கள்ளக்குறிச்சி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து மா்ம நபா்களை தேடி வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT