கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் தலைமையில் அலுவலா்கள், ஊழியா்கள் மனித உரிமைகள் தின உறுதிமொழியேற்றனா்.
மனித உரிமைகள் குறித்த உலகப் பிரகடன அறிக்கை நினைவாக, ஆண்டு தோறும் டிச.10-ஆம் தேதி சா்வதேச மனித உரிமைகள் தினமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
இதையொட்டி, கள்ளக்குறிச்சி ஆட்சியா் அலுவலக வளாகத்தில் புதன்கிழமை காலை மாவட்ட ஆட்சியா் கிரண்குராலா தலைமையில் அலுவலா்கள் மனித உரிமைகள் தின உறுதிமொழியை ஏற்றனா்.
இதில் மாவட்ட வருவாய் அலுவலா் ச.சங்கீதா, சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித் துணை ஆட்சியா் எஸ்.சரவணன், வட்டாட்சியா்கள், அலுவலா்கள் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனா்.
ADVERTISEMENT