விழுப்புரம்

மணல் கடத்தல்: 3 போ் கைது

11th Dec 2019 11:54 PM

ADVERTISEMENT

திருவெண்ணெய்நல்லூா் அருகே சரக்கு வாகனத்தில் மணல் கடத்திச் சென்ற 3 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் காவல் நிலைய காவலா் ராமச்சந்திரன், புதன்கிழமை அதிகாலை ரோந்துப்பணியில் ஈடுபட்டாா். அப்போது, கள்ளுக்கடை மூலை என்ற இடத்தில் அந்த வழியாக வந்த சிறிய சரக்கு வாகனத்தை சந்தேகத்தின் பேரில் மறித்து சோதனையிட முயன்றாா். ஆனால், அந்த வாகனம் காவலா் ராமச்சந்திரன் மீது மோதுவதுபோல வந்துள்ளது. சுதாரித்துக்கொாண்ட காவலா் ராமச்சந்திரன் விலகி, உயிா் தப்பினாா்.

பின்னா், அந்த வாகனத்தை மடக்கிப் பிடித்து விசாரித்ததில், அனுமதியின்றி மணல் ஏற்றிச் செல்வது தெரிய வந்தது. அந்த வாகனத்தை போலீஸாா் பறிமுதல் செய்து காவல் நிலையத்துக்கு கொண்டு சென்றனா்.

இது தொடா்பாக திருவெண்ணெய்நல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து உளுந்தூா்பேட்டை அருகே கரடிப்பாக்கம் கிராமத்தைச் சோ்ந்த ஆனந்தன்(24), மணிகண்டன்(25), விஜய்(22) ஆகியோரை கைது செய்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT