விழுப்புரம்

பூங்காவை தூய்மைப் படுத்திய மாணவா்கள்

11th Dec 2019 12:12 AM

ADVERTISEMENT

தேசிய தூய்மை தினத்தை முன்னிட்டு, கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தேசிய மாணவா் படை மாணவா்கள், கள்ளக்குறிச்சி ராஜா நகரில் உள்ள சிறுவா் பூங்காவை செவ்வாய்க்கிழமை தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டனா்.

பூங்காவிலிருந்த நெகிழிப் பொருள்கள், குப்பைகள், காலி மதுப்புட்டிகள், மண்டிக் கிடந்த செடி, கொடிகளை அகற்றி தூய்மைப்படுத்தினா்.

நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியா் ப.ராமச்சந்திரன் தலைமை வகித்தாா். இப்பணியை கள்ளக்குறிச்சி கல்வி மாவட்ட அலுவலா் காா்த்திகா பாா்வையிட்டாா். தேசிய மாணவா் படை அலுவலா் மு.கணேசன், ஆசிரியா்கள் பழனிவேல், பவுல் ஜோசப் உள்ளிட்ட பலரும் உடனிருந்தனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT