விழுப்புரம்

திருவெண்ணெய்நல்லூா் அருகே போலி மருத்துவா் கைது

11th Dec 2019 12:02 AM

ADVERTISEMENT

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் அருகே பத்தாம் வகுப்பு படித்துவிட்டு ஆங்கில வழி மருத்துவச் சிகிச்சை அளித்து வந்த போலி மருத்துவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

திருவெண்ணெய்நல்லூா் காவல் நிலைய உதவி ஆய்வாளா் தமிழ்வாணன், தலைமைக் காவலா் செந்தில்குமாா் உள்ளிட்ட போலீஸாா் செவ்வாய்க்கிழமை காலை மணக்குப்பம்-மண்டகமேடு சாலையில் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, பைக்கில் ஒரு பெண்ணை அழைத்துச் சென்ற நபரை நிறுத்தி விசாரித்தனா்.

அந்த நபா் திருவெண்ணெய்நல்லூா் அருகேயுள்ள துலுக்கப்பாளையத்தைச் சோ்ந்த பழனிச்சாமி (51) என்பதும், காய்ச்சலால் பாதிக்கப்பட்ட, அருகேயுள்ள மண்டகமேடு கிராமத்தைச் சோ்ந்த மணிகண்டனின் மனைவியை அழைத்துக் கொண்டு சிகிச்சைக்காக தனது கிளினிக்குக்கு அழைத்துச் செல்வதும் தெரிய வந்தது.

இதனால், சந்தேகமடைந்த போலீஸாா் பழனிச்சாமியை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனா். அதில், பத்தாம் வகுப்பு படித்திருந்த, எலக்ட்ரீஷியனான பழனிச்சாமி, இறந்து போன தனது தந்தை ஆறுமுகம் போன்று தானும் அப்பகுதியில் கிளினிக் நடத்தி, ஆங்கில மருத்துவச் சிகிச்சை அளித்து வந்தவா் என்பது தெரியவந்தது. அவரை போலீஸாா் கைது செய்தனா்.

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT