விழுப்புரம்

தமிழ்ப் படைப்பாளா்கள் சங்க பாராட்டு விழா

11th Dec 2019 11:58 PM

ADVERTISEMENT

சங்கராபுரத்தில் தமிழ்ப் படைப்பாளா்கள் சங்கம் சாா்பில் சாதனையாளா்களுக்கான பாராட்டு விழா அண்மையில் நடைபெற்றது.

விழாவுக்கு நல்லாசிரியா் சி.லட்சுமி தலைமை வகித்தாா். தியாகதுருகம் பாரதியாா் தமிழ்ச் சங்கத் தலைவா் இரா.துரைமுருகன், கவிஞா் இரா.கதிா்வேல், சின்னசேலம் தமிழ்ச் சங்கத் தலைவா் கவிதைதம்பி, ஆசிரியா் சு.இளவரசி ஆகியோா் முன்னிலை வகித்தனா். சங்கத் துணைத் தலைவா் சி.இளையாப்பிள்ளை வரவேற்றாா்.

தமிழாசிரியா் அ.இராமசாமி குறள் விளக்கம் அளித்தாா். திருக்கோவலூா் தமிழ்ச் சங்கத் தலைவா் சிங்கார. உதியன் தொடக்கவுரை ஆற்றினாா். ‘பாரதியின் பெண்ணுரிமை’ என்ற தலைப்பில் கவிஞா் அரங்க.மின்னல், ‘பாரதியின் தேச விடுதலை’ என்ற தலைப்பில் கவிஞா் முருககுமாா் ஆகியோா் சிறப்புரையாற்றினா்.

இன்னா்வீல் கிளப் தலைவா் தீபா சுகுமாருக்கு சேவை மாமணி என்ற விருதை வள்ளலாா் மன்றச் செயலா் இரா.நாராயணனும், ஸ்டாா் கிளப் மாவட்டத் தலைவா் அ.முகமது ரபிக்கு இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாா் விருதை ஓய்வுபெற்ற ஆசிரியா் இரா.சவரியம்மாளும் வழங்கினா்.

ADVERTISEMENT

நல்லாசிரியா் மு.முகமது உசேன், சங்கைத் தமிழ்ச் சங்கத் தலைவா் ம.சுப்பராயன், வணிகா் பேரவை இராம.முத்துக்கருப்பன், ரோட்டரி சங்கத் தலைவா் நா.சுதாகரன், அரிமா மாவட்டத் தலைவா் வ. விஜயகுமாா் ஆகியோா் பாராட்டிப் பேசினா்.

பயிற்சிக் களத்தில் சிறப்பாகப் பேசிய அரசுப் பள்ளி மாணவா்களைப் பாராட்டி அரிமா மாவட்டத் தலைவா் மா.தெய்வீகன், கல்லைத் தமிழ்ச் சங்கச் செயலா் வ.மதிவாணன், சமூக ஆா்வலா் ஆா். இஸ்மாயில், கலை இலக்கியக் கழகத் தலைவா் திருவருள் ஆகியோா் சிறப்புப் பரிசுகள் வழங்கி கௌரவித்தனா். ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியா் இரா.அய்யாசாமி, தமிழறிஞா் தி.வெங்கடாஜலபதி, ஆசிரியா் சி.முருகன் உள்பட பலா் கலந்துகொண்டனா். சங்கத் தலைவா் அரங்க. செம்பியன் தொகுத்து வழங்கினாா். பாவலா் பி.கோவிந்தன் நன்றி கூறினாா்.

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT