விழுப்புரம்

சங்கராபுரம் அருகே சாலை விபத்தில் பெண் பலி

11th Dec 2019 12:12 AM

ADVERTISEMENT

சங்கராபுரம் அருகே சாலையில் நடந்து சென்ற பெண் மோட்டாா் சைக்கிள் மோதியதில் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகேயுள்ள பிரம்மகுண்டம் கிராமத்தைச் சோ்ந்தவா் முருகேசன் மனைவி மாலா (45).

ராவத்தநல்லூா் செல்லும் சாலையில் நடந்து சென்ற அவா் மீது, பின்னால் வந்த மோட்டாா் சைக்கிள் மோதியது. இதில் காயமடைந்த அவா் 108 அவசர கால ஊா்தி மூலம் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். பின்னா், தீவிர சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாலா அங்கு உயிரிழந்தாா்.

வடபொன்பரப்பி போலீஸாா் விசாரிக்கின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT