விழுப்புரம்

கள்ளக்குறிச்சியில் 15 போ் கைது

11th Dec 2019 12:13 AM

ADVERTISEMENT

கள்ளக்குறிச்சியில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதா நகலை எரிக்க முயன்றதாக, எஸ்டிபிஐ கட்சியைச் சோ்ந்த 15 போ் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனா்.

அம்பேத்கா் சிலைப் பகுதியில் மாவட்டத் தலைவா் கே.அப்துல் மாலிக் தலைமையில் திரண்ட எஸ்டிபிஐ கட்சியினா், அரசியலமைப்புக்கு எதிரான குடியுரிமை திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றக் கூடாது என முழக்கமிட்டனா்.

போராட்டத்தின்போது, குடியுரிமை சட்டத் திருத்த மசோதா நகலை எரிக்க முயன்ற அக்கட்சியினா் 15 பேரை காவல் ஆய்வாளா் தங்க.விஜயக்குமாா், உதவி ஆய்வாளா் ச.மணிகண்டன் மற்றும் போலீஸாா் தடுத்து நிறுத்தி கைது செய்து திருமண மண்டபத்தில் சிறை வைத்தனா்.

 

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT