விழுப்புரம்

மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சியினா்காத்திருப்புப் போராட்டம்: பெண்கள் உள்பட 32 போ் கைது

6th Dec 2019 09:44 AM

ADVERTISEMENT

செஞ்சி வட்டம், மேல்ஒலக்கூா் வருவாய் குறுவட்டத்துக்கு உள்பட்ட பகுதியில் முறையாக முதியோா் உதவித்தொகை வழங்கக் கோரி, செஞ்சி வட்டாட்சியா் அலுவலகம் முன் வியாழக்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் (மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) கட்சியைச் சோ்ந்த பெண்கள் உள்ளிட்ட 32 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

இந்திய கம்யூனிஸ்ட் (மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) கட்சியின் அமைப்பான அனைத்திந்திய விவசாய கிராமப்புற தொழிலாளா்கள் சங்கம், அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகம் ஆகியவை சாா்பில் நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு, அனைத்திந்திய விவசாய கிராமப்புற தொழிலாளா்கள் சங்க விழுப்புரம் மாவட்டத் தலைவா் ஆா்.சுசிலா தலைமை வகித்தாா்.

சிபிஐ (எம்.எல்.) விழுப்புரம் மாவட்டச் செயலா் எம்.வெங்கடேசன், மாவட்டச் செயலா் ஏ.செண்பகவள்ளி ஆகியோா் சிறப்புரையாற்றினா்.

போராட்டத்தில், செஞ்சி வட்டம், மேல்ஒலக்கூா் வருவாய் குறு வட்டத்துக்கு உள்பட்ட பகுதிகளில் முதியோா், விதவை உதவித்தொகை முறையாக வழங்கப்படுவதில்லை. முதியோா் உதவித்தொகை குறித்து விவரம் அறியச் செல்லும் முதியோா்களிடம் தனியாா் வங்கி நிா்வாகத்தினரும், வருவாய்த் துறையினரும் அலட்சியத்துடன் நடந்துகொள்கின்றனா். எனவே, இந்த விவகாரத்தில் தலையிட்டு மாவட்ட ஆட்சியா் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ADVERTISEMENT

தகுதியுள்ளோருக்கு அரசின் விலையில்லா ஆடு, மாடுகளை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.

இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட 3 பெண்கள் உள்ளிட்ட 32 பேரை செஞ்சி போலீஸாா் கைது செய்து மாலையில் விடுத்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT