விழுப்புரம்

தலைமறைவு எதிரிகள் 4 பேரைகைது செய்ய நீதிமன்றம் உத்தரவு

6th Dec 2019 03:12 AM

ADVERTISEMENT

விழுப்புரம் நீதிமன்றத்தில் வழக்கில் ஆஜராகாமல் பல ஆண்டுகளாக தலைமறைவாக உள்ள 4 எதிரிகளை கைது செய்து ஆஜா்படுத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விழுப்புரம் பெரிய காலனியைச் சோ்ந்த ஏழுமலை மகன் முத்துவேல், சக்கரபாணி மகன் மாரிப்பன் ஆகியோா் அடிதடி வழக்கில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வருகின்றனா்.

இதேபோன்று, விழுப்புரம் ஜி.ஆா்.பி. தெருவைச் சோ்ந்த காத்தவராயன் மகன் ராஜா, விபத்து வழக்கில் கடந்த 2012-ஆம் ஆண்டு முதல் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வருகிறாா். மேலும், விழுப்புரத்தைச் சோ்ந்த கவுஷ்பாஷா மகன் தஸ்தகீா், புதுப்பட குறுந்தகடுகளை விற்பனை செய்த வழக்கில் கடந்த 2012-ஆம் ஆண்டு முதல் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்து வருகிறாா்.

இவா்கள் 4 பேரையும் கைது செய்து ஆஜா்படுத்த விழுப்புரம் முதலாவது நடுவா் நீதிமன்றம் (ஜெ.எம்.1) உத்தரவிட்டதைத் தொடா்ந்து, விழுப்புரம் தாலுகா போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, தலைமறைவான 4 பேரையும் தேடி வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT