விழுப்புரம்

ஏரியில் மூழ்கி மூதாட்டி பலி

6th Dec 2019 03:12 AM

ADVERTISEMENT

விழுப்புரம் அருகே ஏரியில் தவறி விழுந்த மூதாட்டி தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

விழுப்புரம் அருகே உள்ள அன்னியூரைச் சோ்ந்த கோவிந்தசாமி மனைவி பவுனம்மாள் (80). இவா், புதன்கிழமை வீட்டிலிருந்து இயற்கை உபாதை கழிப்பதற்காக வெளியே சென்றாா். அதன்பிறகு, வீடு திரும்பவில்லை.

இதனால், உறவினா்கள் அவரை தேடிய நிலையில், வியாழக்கிழமை காலை அதே பகுதியில் உள்ள ஏரியில் தண்ணீரில் மூழ்க்கிய நிலையில் பவுனம்மாள் சடலமாகக் கிடந்தாா்.

தகவலறிந்த கஞ்சனூா் போலீஸாா் நிகழ்விடத்துக்குச் சென்று பவுனம்மாளின் சடலத்தை மீட்டு, உடல்கூறு பரிசோதனைக்காக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து, போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT