விழுப்புரம்

விபத்தை ஏற்படுத்திய அரசுப் பேருந்து ஓட்டுநருக்கு ஓராண்டு சிறை

30th Aug 2019 10:03 AM

ADVERTISEMENT

நின்று கொண்டிருந்த லாரி மீது அரசுப் பேருந்து மோதி இருவர் உயிரிழந்த வழக்கில், பேருந்து ஓட்டுநருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து கள்ளக்குறிச்சி நீதிமன்றம் வியாழக்கிழமை தீர்ப்பளித்தது.
கள்ளக்குறிச்சியை அடுத்த மாடூர் பேருந்து நிறுத்தம் அருகே கடந்த 21.8.2012 அன்று பழுதாகி நின்ற லாரியின் டயரை மாற்றும் பணியில் நீலகிரி மாவட்டம், குன்னூர் அம்பிகாபுரம் பகுதியைச் சேர்ந்த ஜெய
பாலன் மகன் சீனுவாசன் ஈடுபட்டிருந்தார்.
அப்போது, புதுச்சேரியில் இருந்து சேலம் நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து, அந்த லாரி மீது மோதியதில், சீனுவாசனும், பேருந்தில் 
பயணம் செய்த கடலூர் பகுதியைச் சேர்ந்த சுரேஷ்பாபு மகன் சிலம்பரசனும் உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக அரசுப் பேருந்து ஓட்டுநரான சேலம் மாவட்டம், மேட்டூர் வட்டம், தெள்ளார் பகுதியைச் சேர்ந்த சின்னப்பொன்னு மகன் ராஜேந்திரன் மீது கள்ளக்குறிச்சி போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த வழக்கு கள்ளக்குறிச்சி விரைவு குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை வியாழக்கிழமை விசாரித்த நீதிபதி லதா, அரசுப் பேருந்து ஓட்டுநரான ராஜேந்திரனுக்கு ஓராண்டு சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT