மேல்மலையனூர் வட்டம், துறிஞ்சிப்பூண்டியில் நடைபெற்ற மக்கள் தொடர்பு திட்ட முகாமில், 271 பயனாளிகளுக்கு ரூ 40.98 லட்சம் மதிப்பிலான அரசு நலத் திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் இல.சுப்பிரமணியன் புதன்கிழமை வழங்கினார்.
நிகழ்ச்சியில், செஞ்சி எம்எல்ஏ மஸ்தான், தனித் துணை ஆட்சியர் அம்புரோஸியா நேவீஸ்மேரி, இணை இயக்குநர் மனோகரன், மாவட்ட வழங்கல் அலுவலர் சந்திரசேகரன், மாவட்ட ஆதி திராவிடர் நல அலுவலர் ஜெயக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை மூலம் 11 பயனாளிகளுக்கு முழுபுலம் பட்டா மாற்றம், 8 பயனாளிகளுக்கு உள்
பிரிவு பட்டா மாற்றத்துக்கான உத்தரவையும், வேளாண்மைத் துறை மூலம் 5 பயனாளிகளுக்கு ரூ.1,60,000 மதிப்பிலான வேளாண் உபகரணங்களையும், தோட்டக்கலைத் துறை மூலம் 5 பயனாளிகளுக்கு ரூ.4,23,676 மதிப்பீட்டில் தோட்டக்கலை உபகரணங்களையும், முதியோர் உதவித் தொகை மற்றும் இதர இனங்களின் கீழ் 105 பயனாளிகளுக்கு ரூ.12,60,000 மதிப்பீட்டில் உதவித் தொகைகளையும், 30 பயனாளிகளுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகளையும், 60 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்களையும் ஆட்சியர் வழங்கினார்.
மேலும், தமிழக முதல்வரின் உழவர் பாதுகாப்புத் திட்டத்தின்கீழ் இயற்கை மரண உதவித் தொகையாக 9 பயனாளிகளுக்கு ரூ.20,02,500, திருமண
உதவித் தொகையாக 21 பயனாளிகளுக்கு ரூ.1,72,000, கல்வி உதவித் தொகையாக 7 பயனாளிகளுக்கு ரூ.48 ஆயிரம் மதிப்பீட்டிலும், ஆதி திராவிடர் நலத் துறை மூலம் ஒருவருக்கு ரூ.15,000 மதிப்பில் நலத் திட்ட உதவி என மொத்தம் 271 பயனாளிகளுக்கு ரூ.40,98,26 மதிப்பீட்டில் நலத் திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் இல.சுப்பிரமணியன் வழங்கி சிறப்புரையாற்றினார்.
முகாமில், மேல்மலையனூர் வட்டாட்சியர் செந்தில்குமார், தலைமையிடத்து துணை வட்டாட்சியர் பசுபதி, சமூகப் பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியர் பழனி, மண்டல துணை வட்டாட்சியர் வெடங்கடேசன்,
வருவாய் ஆய்வாளர் உஷாராணி, கிராம நிர்வாக அலுவலர் கோவிந்தராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.